Posts

எமது கிராமம்

அமைவிடம்  இலங்கை திருநாட்டில் சைவமும் தமிழும் மணம் வீசுகின்ற கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவிலிருந்து மேற்கில் சுமார் 05 கிலோமீட்டர் தொலைவில் வீரமுனைக் கிராமம் அமைந்துள்ளது.  வடக்கே மட்டக்களப்பு வாவியினையும்  மேற்கே பச்சை பசேலென வயல் வெளியினையும் தெற்கு, கிழக்கில் சம்மாந்துறையினை எல்லையாக கொண்டு தனியே இந்துக்களை கொண்ட கிராமம் ஆகும்.  இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வேளாண்மை சாகுபடி செய்பவர்களாகவும் அரச நிறுவனங்களில் தொழில்புரிபவர்களாகவும் காணப்படுகின்றனர். வீரமுனைக் கிராமத்தின் தோற்ற வரலாறு  சீர்பாததேவியின் தேசமான சோழ நாட்டிலே சீர்பாததேவி வாலசிங்கன் திருமணம் இடம்பெற்று சில நாட்கள் அவர்கள் இன்பமாக கழித்த போதிலும் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையினை முழுமையாக அங்கு கழிக்க முடியாது கணவன் வீட்டில் மனைவி சென்று வாழவேண்டிய தமிழர் பண்பாடும், சிங்கை நாட்டு மன்னவன் என்ற பொறுப்பில் வாலசிங்கன் இருப்தினாலும் அவர்கள் இருவரும் சிங்கை அரண்மனைக்கு திரும்புவது அவசியமான ஒன்றாக காணப்பட்டது. எனினும் தன் மகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த குமாராங்குசனுக்கு தன் மகள் இன்னுமொ